ILAVARASI KITCHEN Skip to main content

Posts

Showing posts from September 11, 2022

கிச்சன் டிப்ஸ் தமிழ் - 10 kitchen tips Tamil

  டிப்ஸ்‌ 1: வீட்டில்‌ எறும்புப்‌ புற்று இருந்தால்‌ அங்கே கொஞ்சம்‌ பெருங்காயத்‌ தூளைத்‌ தூவிவிட்டால்‌ எறும்புத்‌ தொல்லை இருக்காது. டிப்ஸ்‌ 2: சமையலறை டிப்ஸ்‌: ஒரு டம்பளர்‌ தண்ணீரில்‌ நான்கு டேபிள்‌ ஸ்பூன்‌ உப்பு கலந்து அதை அறையின்‌ நான்கு பக்க ஓரங்களில்‌ தெளித்துவிட்டால்‌ எறும்பு நடமாட்டம்‌ இருக்காது. டிப்ஸ்‌ 3: எப்பொழுதாவது உபயோகிக்கும்‌ ஷூக்களில்‌ ரச கற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும்‌ போட்டு வைத்தால்‌ பூச்சிகள்‌ அண்டாது. டிப்ஸ்‌ 4: இஞ்சியை ஈரத்துணியில்‌ சுற்றித்‌ தண்ணீர்க்‌ குடத்தின்‌ மேல்‌ வைத்திருந்தால்‌ பத்து நாள்‌ வரை புதிதாகவே இருக்கும்‌. டிப்ஸ்‌ 5: காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத்‌ தோல்களை அலமாரியில்‌ வைத்தால்‌ பூச்சிகள்‌ அண்டாது. டிப்ஸ்‌ 6: வெங்காயம்‌ நறுக்குவதற்கு முன்‌ கத்தியை சூடு செய்து விட்டால்‌ கண்களில்‌ எரிச்சல்‌ இருக்காது. டிப்ஸ்‌ 7: சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும். டிப்ஸ்‌ 8: ஞாயிற்று கிழமை என்றதும், எல்லோரின் நினைவில் வருவதும் மீன், சிக்கன் மட்டன் வறுவல் தான், பெரும்பாலான இல்லத்தரசி