பசலைக்கீரையில் - இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது, மருந்தாகும் மதிப்பு உள்ளது
பசலைக்கீரையில் கலோரி குறைவானது - கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
பசலைக்கீரையில் - அதிகப்படியான வைட்டமின்களைக் கொண்டது பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
பசலைக்கீரையில் - ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பது பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும்.
பசலைக்கீரையில் - கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்
பசலைக்கீரையில் - ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
பசலைக்கீரையில் - உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
பசலைக்கீரையில் - நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.
பசலைக்கீரையில் - மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக்குணப்படுத்தும்.
இவ்வுளவு நன்மையுள்ள பசலைக்கீரையை நாமும் சாப்பிடலாமே
Comments
Post a Comment