இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரை கடையல் பாக்க போறோம் ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய ஒரு கீரை கடையல் பருப்பு இல்லாமல் சூப்பரா செய்ய போறோம் வாங்க இந்த கீரை கடையல் எப்படி பண்ணனும்னு பார்க்கலாம்
தேவையான பொருள் :
அரைக்கீரை ஒரு கட்டு -
ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம்
1 பச்சை மிளகாய்
சீரகம் ¼ ஸ்பூன்
உப்பு கொஞ்சமா போட்டுக்கோங்க
தண்ணீர் - கொஞ்சமா சேர்த்துக்கோங்க
தேங்காய் - 6 சில்லு
தாளிக்க:
நெய் ,கடுகு, உளுந்து ,கறி வடகம் , சாம்பார் தூள்
செய்முறை :
- அரைக்கீரை-ய ரெண்டு தடவை வாஸ் பண்ணி கிளீன் பண்ணிட்டு எடுத்து வச்சுக்கோங்க
- இப்ப - குக்கர்ல கீரை-ய சேர்த்துக்கலாம் , அதோட ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய் , சீரகம், உப்பு அப்புறம் கொஞ்சம் தண்ணீர் இதெல்லாம் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வேக வைங்க.
- ஒரு விசில் வந்ததும் அப்புறமா, உடனே விசில்-ல உள்ள ஆவியை ஒரு கரண்டி வைத்து எடுத்துவிடுங்க இதை அப்படியே நீங்க எடுக்காம விட்டுட்டீங்க-நா வந்து கீரை நிறம் மாறிவிடும். அடுத்து கீரை-ய கொஞ்சம் ஆற விடுங்க.
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் - தேங்காய தண்ணி ஊத்தாம கரகரப்பாக அரைக்கவும், அதுக்கு அப்புறமா ஆறு-ன கீரையை அதோட அரைச்சிக்கலாம். கீரையை அதிகமாக அரைக்காதிங்க டேஸ்ட் நல்லா இருக்காது.
- கடைசியா கீரைய தாளிச்சு விட்டறலாம் .தாளிக்க கொஞ்சமா நெய் சேர்த்து சூடா பிறகு கடுகு, உளுந்து ,கறி வடகம் போட்டு கொஞ்சம் ப்ரை பண்ணனும், வாசனை வந்தது சாம்பார் தூள் போட்டு கீரையை அதுல சேர்த்துக்கலாம் , பச்சை வாசனை எல்லாம் போனதுக்கு அப்புறமா அடுப்ப ஆப் பண்ணுங்க
கீரை கடையல் இப்போ ரெடி .
நீங்களும் கண்டிப்பாக இந்த சமையல செஞ்சு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும் மறக்காம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க
இந்த செய்முறையை வீடியோவில் பாருங்கள்
Comments
Post a Comment