தேவையான பொருள் :
வட்டமா நறுக்குன கோவக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
சால்ட் -1 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை
மஞ்சத்தூள்
குழம்பு தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் -2 ஸ்பூன்
சோம்பு 1/4 ஸ்பூன்
வறுத்த கடலை - கரகரப்பா பொடிக்கவும்
கடுகு உளுந்து சீரகம் 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்
சமைக்க நல்லெண்ணெய்
பூண்டு-4 பல்லு
ரெண்டு டேபிள் ஸ்பூன் வறுத்த கடலை பொடிச்சுக்கணும்
தேங்காவையும் சோம்பையும் பேஸ்ட்டா அரச்சுக்கணும்
ஒரு பெரிய வெங்காயம் மீடியமா நறுக்கிக்கோங்க
பொடியா நறுக்குன 4 பல்லு பூண்டு பல்லு.
வட்டமா நறுக்குன கோவக்காய் - ல உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்துகவும்’
கடாய்-ல கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்திட்டு கோவக்காவை அதுல போட்டு கொஞ்சம் லைட்டா ப்ரை பண்ணனும். ஒரு மூணு கையளவு சும்மா கொஞ்சமா தண்ணிய தெளிச்சு வேக விடணும்
ஒரு டீஸ்பூன் குழம்பு தூள் அதுல போட்டு பிரை பண்ணனும்
கொஞ்சம் நல்லா ஃப்ரை ஆனோன பச்சை வாசனை எல்லாம் போனதுக்கு அப்புறமா கோவாக்க-வ வந்து கொஞ்சம் வெந்த மாதிரி இருக்கிற ஸ்டேஜ்ல வந்து நம்ம தேங்காய் பேஸ்ட் அதுல சேர்க்கணும்
வதக்க
அதுக்கு அடுத்து , வேற ப்ரை பான் -ல கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்திட்டு கடுகு உளுந்தம் பருப்பு தாளிச்சுக்கலாம்.அதோட ரெண்டு வரமிளகாவும் பூண்டு போடணும்
இப்ப நம்ம நறுக்கி வைத்திருந்த ஒரு பெரிய வெங்காயத்தை இதுல சேர்த்துக்கலாம்
வெங்காயம் நல்லா வதங்கிய பிறகு கோவாக்கல( கடாய்-ல சேர்த்துரலாம்)
இப்போ வறுத்து வச்சிருக்கிற கடலையும் சேர்த்துரலாம்
ரொம்ப சூப்பரான வழுவழுத்தன்மையே இல்லாம கோவக்காய் சூப்பரா நம்ம ப்ரை பண்ணியாச்சு.
இந்த செய்முறையை வீடியோவில் பாருங்கள்
Comments
Post a Comment